காரைக்காலை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கொலை வழக்கு தொடர்பாக, மேலும் ஏழு பேர் விழுப்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.இந்த நிலையில், செம்பன்னார்கோவில் அருகே காரில் சென்று கொண்டிருந்த மணிமாறனை, ரவுடி கும்பல் ஒன்று வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை செய்தது. இந்த வழக்கில், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தேவமணியின் மகனும் பாமக மாவட்ட செயலாளருமான பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மயிலாடுதுறை மாவட்டம் பாளையூர் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த கூலிப்படையினர் 7 பேர் வளவனூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.இதையும் படியுங்கள் : உலகளாவிய முக்கிய அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கவலை..!