சென்னை திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வ.உ.சி நகரை சேர்ந்த டேனியல் என்பவர் தனது குடும்பத்துடன் அம்பத்தூரில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர். அப்போது, சந்தியமூர்த்தி நகர் விரைவு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெயர்னர் லாரியின் பின்புறத்தில் அவரது பைக் மோதி விபத்துக்குள்ளானதில், டேனியல் மற்றும் அவரது மகனும் உயிரிழந்தனர். அவரது மனைவி மற்றும் மகளும் படுகாயம் அடைந்தனர். இதே போல், பைக்குகளில் சென்ற ஒண்டிகுப்பத்தை சேர்ந்த முகமது அலி என்பவர் கண்டெய்னர் லாரியிலும், மற்றொருவர் டேங்கர் லாரியின் மீதும் மோதி உயிரிழந்தனர்.