திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை வெளுத்து வாங்கி பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் கொசுக்களும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வந்த 2 குழந்தை உட்பட 4 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் டெங்கு உறுதியானது.