புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 4 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்கவும் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வாய்ப்பளித்து வருகிறார்.