கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பாஸ் தயாரித்து கேரளாவிற்கு கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், போலி பாஸ் தயாரிக்க அதிகாரிகள் பயன்படுத்தும் சீல் மற்றும் தமிழ்நாடு அரசின் சின்னம் பொறித்த 3-D ஹாலோ கிராம் ஸ்டிக்கர்களை தயார் செய்த அச்சக உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.