கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 3 வயது சிறுவனை தெருநாய்கள் தலை மற்றும் கன்னத்தில் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரை சேர்ந்த நந்தினி- பிரதாப் தம்பதி தனது மகனுடன் நாகொண்டபள்ளில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறியுள்ளன. இதில், தலை மற்றும் கன்னம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.