சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோயிலில், 37 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையொட்டி, ராமநாதபரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் மடப்புரம் அறநிலைய துறை உதவி ஆணையர் கணபதி முன்னிலையில் மதுரை பக்தர்கள் சபையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உண்டியல் காணிக்கையினை எண்ணினர். இதில், 37லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம், 382 கிராம் தங்கம் மற்றும் 510 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.