சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் இருந்து 372 ஆண்டுகள் பழமையான, சேதுபதி மன்னர் காலத்து செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி.1653ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த செப்பேட்டில் இரு குழுக்களிடையே நடைபெற்ற சண்டையும், வெற்றி பெற உதவியவர்களுக்கு கிடைத்த பலிக்காணி குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றரை அடி நீள, அகலத்தில் சதுர வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த செப்பேட்டின் இரு பக்கத்திலும் 128 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் 19 வரிகளில் சேதுபதி மன்னரை புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவு... பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியருக்கு நடந்த சோகம்