சென்னை மெட்ரோ ரயில், 2-ம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க, பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 657 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகள் கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.