மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 36 ஆயிரத்து 985 கன அடியிலிருந்து 35 ஆயிரத்து 800 கன அடியாக குறைந்தது. நடப்பாண்டில் ஆறாவது முறையாக மேட்டூர் அணை 120 அடி எட்டியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் படி காவிரி டெல்டா பாசனத்திற்கு 22 ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக 12 ஆயிரத்து 500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.