சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 56 ஆயிரம் பேர், அரசு பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு குளிர்சாதன வசதி பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அரசு பேருந்துகள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுவதாக தெரிவித்தார்.