திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 35 டன் மலை கற்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மலை கற்கள் அதானி துறைமுகத்திற்கு முறைகேடாக கொண்டு செல்வதாக வந்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுங்கத்துறை மற்றும் சுரங்கத்துறை துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு லாரியுடன் மலை கற்களை பறிமுதல் செய்தார். இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான மலை கற்கள் அதானி துறைமுகம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.