திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடேசன் நகரைச் சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் கைவரிசை காட்டிய சுதாகர், அரவிந்தன், தன்ராஜ் ஆகியோரிடம் இருந்து போலீசார் 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.