விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே விபத்து வழக்கில் 31 லட்சத்து 53 ஆயிரத்து 611 ரூபாய் இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுபேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு வழக்கு செலவுடன் கூடிய இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.