வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட விவசாய தேவைக்காக, வைகை அணையில் இருந்து இன்று முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மொத்தமாக ஆயிரத்து 251 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இதையும் படியுங்கள் : கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு..