கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற மாடு மாலை தாண்டும் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 14 மந்தை சார்பில் நடைபெற்ற விழாவில், நாயக்கர் சமூகத்தினர் வீட்டில் வளர்க்கும் காளை மாடுகளை சரக்கு ஆட்டோ, வேன் மற்றும் லாரிகளில் அழைத்து வந்தனர். பிறகு, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எல்லையில் இருந்து மாடுகள் விரட்டி வரப்பட்டன.