மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை மாரியம்மன் கோயிலில் காது குத்து விழாவின் போது, மரத்தில் இருந்து வெளியேறிய விஷ கதண்டு பூச்சிகள் கடித்ததில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொற்கை கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவரது குழந்தைகளின் காது குத்து விழாவின் போது, அம்மனுக்கு பொங்கலிட்ட போது, வெளியேறிய புகையால் மரத்தின் மேல் கூடு கட்டியிருந்த கதண்டுகள் வெளியேறி அனைவரையும் கடித்தன. இதில் பலருக்கு கை, கால் மற்றும் முகங்களில் வீக்கம் ஏற்பட்டது.