நாகை மாவட்டம் கீழையூரில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கீழையூர் ஈசிஆர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பல்சர் பைக்கில் வந்த 3 இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அந்த மூவரும் திருட்டு பைக்கில் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வெங்கடேஷ், யோகேஷ், சந்தோசம் என்ற இந்த 3 இளைஞர்களும், திருப்பூண்டி உள்பட பல்வேறு இடங்களில் பைக் திருட்டில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பல்சர், டியோ உள்ளிட்ட 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.