கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடியில் இளைஞர்கள் 3 பேர் வீடு புகுந்து பாத்திரம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாழக்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகள் மற்றும் வீட்டு பாத்திரங்கள் தொடர்ச்சியாக காணாமல் போனது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, இளைஞர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.