ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒரிச்சேரி புதூரில் ஈச்சர் வேன், கரும்பு பாரம் ஏற்றிவந்த டிராக்டர் மற்றும் அரசு பேருந்து என மூன்று வாகனங்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் பவானி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.