நீலகிரி மாவட்டம் உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளான நிலையில் அந்த வாகனங்களை போலீசார் கைகளாலேயே தள்ளி போக்குவரத்தை சீர் செய்தனர். ஃபன் ஹில் அருகே கார் ஒன்று எதிரே வந்த ஜீப்புடன் நேருக்கு நேர் மோதிய நிலையில், பின்னால் வந்த மற்றொரு காரும் ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை கைகளாலேயே தள்ளி சாலையோரமாக நகர்த்தினர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.