விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகள் மற்றும் கார் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் கொள்ளார் அருகே கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியுள்ளது. காருக்கு பின்னால் வந்த மற்றொரு பேருந்து, காரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்பளமாக நொறுங்கிய காரில் சிக்கிய பெண் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், பேருந்து பயணிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.