திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், 11 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருத்தணி முருகப்பன் நகரில் மகேந்திரன் என்பவரது வீட்டின் முதல் தளத்தில், தாழவேடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார், மனைவி, 2 வயது மற்றும் 11 மாத ஆண்குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த நிலையில், தரைதளத்தில் இருந்த மகேந்திரன் குடும்பத்தினர் வெளியே செல்லாமல் இருந்தனர். முதல் தளத்தில் இருந்த பிரேம்குமார் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தப்பிச்செல்ல முயன்று தீயில் சிக்கினார். படுகாயமடைந்த நால்வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.