கன்னியாகுமரியில் நகைக்கடையில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் தேதி அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் புன்னார்குளம் பகுதியைச் சேர்ந்த அஜித், அழகப்பபுரம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த அசோக், வாரியூர் வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.