கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்த இரணியல் போலீசார், இரண்டு டெம்போக்களை பறிமுதல் செய்தனர்.ரகசிய தகவலின் பேரில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், ராஜேஷ், மணிகண்டன் மற்றும் விக்டர் செம்மண் கடத்த முயன்ற போது போலீசிடம் சிக்கினர்.