கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். பெங்களூர் அங்கேரி பகுதியில் வசித்து வரும் மென்பொறியாளரான மகாதேவசுவாமி, மனைவி ராஜாமணி, மகன் உடன் காரில் திருமணஞ்சேரி சென்று விட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியதாக கூறப்படுகிறது. கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் ஜிஎஸ்டி சாலையில், சாலையை கடக்க முயன்ற பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி கார் மீது பலமாக மோதியது. இதில் கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.