சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்ட SP உத்தரவின் பேரின் தனிப்படை அமைத்த போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வெங்கடேஷ், ராமலிங்கம், ஜீவா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.