வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரில் ஒருவர் கைது செய்த போலீசார் இருவரை தேடி வருகின்றனர். அரசம்பட்டு காப்பு காடு, முத்துக்குமரன் மலைப்பகுதியிலுள்ள ஓடையில் டிராக்டர் மூலம் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது கடத்திலில் ஈடுபட்ட 3 பேரை, வனத்துறையினர் தட்டிக் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்த போது, அந்த கும்பல் செல்போன்களை பிடுங்கி, வனத்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்து பின் தப்பியோடிதாக கூறப்படுகிறது. இதில் வனக்காப்பாளர் பார்த்திபன் படுகாயமடைந்தார். இந்த வழக்கில் டிராக்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.