திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார் பறந்து சென்று விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.வடமதுரை அருகே உள்ள கெச்சானிபட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது உறவினரான மீனா என்ற பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூர் பிரிவு அருகே சென்றபோது, உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் ஓட்டிச்சென்ற கார் திடீரென பயங்கரமாக மோதியது. இருசக்கர வாகனம் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி அங்கு தேங்கி இருந்த கழிவுநீர் வாய்க்காலை தாண்டி பறந்து சென்று விழுந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரேம்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.