புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 பேர் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.புதுச்சேரி பகுதிகளில் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாததால், ஒரே படுக்கையில் 3 பேரும், தரையில் அமர்ந்தும், வராண்டாவில் அமர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும் கூறினார்.