மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூன்று பேரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன் மற்றும் அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆக இருக்கும் நிலையில், தற்போது 62 நீதிபதிகள் உள்ளனர். இதனிடையே , சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கௌரி,பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன், ஆர். கலைமதி மற்றும் கே.ஜி.திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.