திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மனைவி மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே முல்லை நகரை சேர்ந்த இளங்குமரன் என்பவர் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகாதேவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மகள் தேன்மலர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாக வீட்டில் இருந்த மூவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். தொடர்ந்து மூவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.