புதுச்சேரி மாநிலம் இந்திரா காந்தி சிலை அருகே கடையில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்கள், மாமுல் தர மறுத்த கடை ஊழியரை சராமரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வசந்த் என்பவர் கடையில் சந்திரன் என்ற இளைஞர் வேலை செய்து வரும் நிலையில், கடைக்கு போதையில் சென்ற 3 இளைஞர்கள் மாமுல் கேட்டு அவரை தாக்கினர்.