திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகளும், ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.அடையபுலம் கிராமத்தை சேர்ந்த சிறார்கள், பள்ளி விடுமுறை தினத்தன்று அண்ணாநகர் ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.