விழுப்புரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க போடப்பட்டிருந்த வலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மணம்பூண்டி பகுதியை சேர்ந்த 8 வயது தர்ஷன், 10 வயது ஜீவிதன், 11 வயது ஹரிஹரன் ஆகிய 3 சிறுவர்களும் கோட்டமருதூர் ஏரிக்கு குளிக்க சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்த தர்மா ஏரியில் மீன்பிடிப்பதற்காக வலைவிரித்திருந்த நிலையில் இதனை அறியாத சிறுவர்கள் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வலையில் சிக்கி உயிரிழந்தனர். மீன் கிடைத்திருக்கும் என்று வலையை எடுத்து பார்த்து அடிதிர்ச்சியடைந்த தர்மா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.