சென்னை மயிலாப்பூரில் இரும்பு சாரம் சாய்ந்து விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்த நிலையில், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் 3 மாடி கொண்ட டவுளானி டவர்ஸ் வணிக வளாக கட்டத்தில் ஒருவாரமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கட்டப்பட்டிருந்த பெரிய இரும்பு சாரம், திடீரென பயங்கர சத்தத்துடன் சாய்ந்து கீழே விழுந்தது.