நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் தேயிலை தோட்டம் பகுதியில் மூன்று கரடிகள் ஜாலியாக சுற்றி திரியும் வீடியோ வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னிகா தேவி காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 3 பெரிய கரடிகள் ஜாலியாக உலா வருகின்றன. இதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.