திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாங்கிய நிலத்தை ஈரோடு திமுக எம்.எல்.ஏ. சந்திரகுமார் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலம் தேமுதிகவிற்கு சொந்தம் என காங்கேயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேனாபதிபாளையத்தில் வாங்கிய 3 ஏக்கர் நிலத்தை சந்திரகுமார் பெயரில் விஜயகாந்த் பதிவு செய்திருந்தார்.