தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்த பிறகும் அனுமதி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், திருமங்கலம் ஏ.எஸ்.பி அன்சுல் நாகரை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து பேசி மாநாட்டுக்கு அனுமதி பெற்றார்.