சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறவடைந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கிய கல்வராயன் என பெயரிடப்பட்ட இயந்திரம், 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு, பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.