கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 2 ஆயிரத்து 999 கனஅடியாக நீர் வெளியேற்றப்படும் நிலையில் குவியல் குவியலாக நுரை பொங்கி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.