மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2 ஆயிரத்து 870 கொடிக் கம்பங்களை 28-ம் தேதிக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றும்படி 7 துறைகளின் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.