புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, மின்னல் தாக்கியதில் 28 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. முரட்டு சோளகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் இளவரசி ஆகியோர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. அதில், படுகாயமடைந்த இரு பெண்களும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.