திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி கிராமத்தில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து 27 சவரன் நகைகள் திருடப்பட்ட நிலையில், மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் களவாடபட்டதால் அவர்களின் தாய் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. மோகன் - கவிதா தம்பதியதின் வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள், வழக்கம்போல் சாவி வைக்கும் இடத்தை அறிந்து கொண்டு ஆள் இல்லாத நேரத்தில் வீட்டை திறந்து 27சவரன் நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தம்பதியர் குற்றம் சாட்டினர்.