பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீதான விசாரணை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரன், அஸ்வத்தாமன், பொன்னைபாலு, ராமு மற்றும் அஞ்சலை உள்ளீட்ட 27 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பதிரிக்கை நகல் வழங்கப்பட்டன. இதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரை காவல்நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.