திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வெறிநாய் கடித்து 27 செம்மறி ஆடுகள் உயிரிழந்த நிலையில், ஆடுகளை சாலையில் போட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஆடுகளுக்கான காப்பீட்டு திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றும் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.