தூத்துக்குடி மாவட்டம குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஆண்டுக்கு 25க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ராக்கேட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிக்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாராயணன், குலசேகரன்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என திட்டவட்டமாக கூறினார்.