ரூ.22.69 கோடி மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளை, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் குடியரசின் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மற்றும் ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜெர்மன் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மிச்செல குச்லர், 5C வழித்தடத்தில் இயங்கிய மாநகர பேருந்தில் தான் பயணித்ததன் அனுபவத்தை கூறி சென்னையில் மாநகர பேருந்தின் சேவையை வெகுவாக பாராட்டினார்.