விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்ற வருவதோடு, மதுகுடிப்போரோல் பாதிப்பை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஊர் சேத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் பார் உரிமையாளர் முத்துக்குமார் என்பவர் 24 மணி நேரமும் மதுபானத்தை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.