மதுரை விமான நிலையத்தில் வரும் அக்டோபர் முதல் 24 மணி நேர சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கேற்றார் போல் விமான சேவை நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த விமான நிலையம், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வரும் அக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் இயங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.